தாய்க்கி பிள்ளையேதடா தண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாரா!கூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் நேர்காணல்

சேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி!.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு!.

தோல்பொம்மை தெருக்கூத்துக்கலைஞர் திருமதி.ஜெயா செல்லப்பன் அவர்களுடன் ஓர் நேர்காணல்

தோல் பொம்மை / தெருக்¢கூத்துக்கலைஞர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் திருமதி ஜெயா செல்லப்பன் அவர்கள் நாமக்கல். ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்ட அளவில் நன்கறியப்பட்ட தோல் பொம்மை கலைஞர், மட்டுமல்ல அற்புதமான தெருக்கூத்து கலைஞரும் கூட.