ச்சட்டீர்……..ச்சட்டீர்

மாடு வாய்க்குமாம் மவராசனக்கு .பொண்டு வாய்க்குமாம் புண்ணியவானுக்கு .செட்டுக்கு  ஆளுங்க நேர்றது அவ்ளச் சிலேட்டமில்ல. ரெட்டியாரும்,பரமசிவனும் ,ராசாக்கவுண்டனும்,செல்வராசியுங்கூட நல்லூரு கருவாயஞ்  சேகரும் வந்து எடஞ்  சேந்துருக்கறாங்க.இந்த சீசனு தேவல. நடுத்தரம். தையில இருவது ராத்திரி  மாசியில பத்து ராத்திரி ஒட்டியிருக்குது .

ஆதமத்த நாடு

போடுவாசி மவ சம்புநதிக்கி குமிஞ்சி நாட்டையில எழக்கட்ட முடியில.  ரெண்டு தக்கம் குதுக்குகுதுக்குன்னு உதரம் புடுங்கித் தீட்டாப் பட்டுக்கிட்டிருந்திச்சி.  வூட்டுக்குத் தூரம் போறன்னைக்கிப் பாழாப்போனப் பொம்பளச் சென்மத்துக்கு ஒடம்பு ஒடம்பாட்டமா இருக்குது கருமாந்தரம்? 

நாயி வாயிச்சீல

தெரட்டி முடிஞ்சதும் பொறப்படலாமுன்னா எங்க முடியிது? சொணையான இன்னுமே வரிக்கல, மணி பதனொன்னாவுதோ’ பன்னண்டாவுதா’ தெரில. ஆட்டத்துக்கும் போயிகிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா?கயிட்டத்தப் பாத்தா காச கண்லக் காங்கறதெப்பிடி? நாமக் கைதொட்ட காரியமாவறதெப்பிடி?

தாய்க்கி பிள்ளையேதடா தண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாரா!கூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் நேர்காணல்

சேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி!.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு!.

தோல்பொம்மை தெருக்கூத்துக்கலைஞர் திருமதி.ஜெயா செல்லப்பன் அவர்களுடன் ஓர் நேர்காணல்

தோல் பொம்மை / தெருக்¢கூத்துக்கலைஞர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் திருமதி ஜெயா செல்லப்பன் அவர்கள் நாமக்கல். ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்ட அளவில் நன்கறியப்பட்ட தோல் பொம்மை கலைஞர், மட்டுமல்ல அற்புதமான தெருக்கூத்து கலைஞரும் கூட.